இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sajith Premadasa
By Laksi Dec 17, 2024 05:38 AM GMT
Laksi

Laksi

புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைஸர் முஸ்தபா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் முத்து இஸ்மாயில் மொஹமட் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

பதவிப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணமும் புதிய சபாநாயகரின் நியமனமும் இடம்பெற்றுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம் | Sjb Mps Take Oath Today

இதனையடுத்து, 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சபாநாயகராக, ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

கல்முனையில் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவன பிரதானிகளுக்கு விருது

கல்முனையில் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவன பிரதானிகளுக்கு விருது

சபை ஒத்திவைப்பு பிரேரணை

இன்றைய அமர்வின்போது, மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 3.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நாளை மீண்டும் இந்த விவாதம் தொடரவுள்ளது.

இதற்கமைய முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

இதன் பின்னர் பி.ப. 3.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை மு.ப. 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5 மணி முதல்நாள் ஒத்திவைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்புத் தொகை மதிப்பீடு பற்றிய விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய முன்னர் தீர்மானிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட விடயங்களைப் பிறிதொரு தினத்தில் விவாதத்துக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பி.ப. 5 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW