அரிசி தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Rice
By Laksi Dec 06, 2024 06:43 AM GMT
Laksi

Laksi

அரிசி தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்தமாதம் 20ஆம் திகதிக்குள் 50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரிசி தட்டுப்பாடு 

நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரிசி தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு | Shortage Of Rice Will Be Solved Soon Anura

இதன்போது, தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

அரிசி இறக்குமதி

ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.

அரிசி தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு | Shortage Of Rice Will Be Solved Soon Anura

எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம். "இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை.இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது.

ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை. நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.  

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளருக்கு பிணை

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளருக்கு பிணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW