நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டில் இதுவரையான காலபகுதியில் இலங்கையின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 43 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவற்றில் 29 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்களாவர்.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
இந்தநிலையில் அண்மைக்கால சம்பவமாக, நேற்று கொட்டாஞ்சேனையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 வயது ஆணும் 70 வயது பெண்ணும் காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆண், பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான புக்குடு கண்ணா என்று அழைக்கப்படும் பாலசந்திரன் புஸ்பராஜின் நெருங்கிய நண்பர் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்
இதேவேளை சிலாபத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு பெண்ணின் காதலனால் ஏர் ரைபிள் மூலம் சுடப்பட்டதில் அவரது வாயில் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு காதலன் தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |