காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைதான சந்தேக நபர்கள் நாவற்குடா, கல்லடி, பாலமுனை, காத்தான்குடி, தாளங்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
இதன்போது, இவர்களிடமிருந்து 4 கிராம் 590 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 40 பொதிகளில் வைக்கப்பட்ட கேரள கஞ்சா, 21,000 மில்லி லீட்டர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |