இஸ்ரேலிய படைகளின் சோதனையில் சிக்கிய ஏழு பலஸ்தீனியர்கள்!
Israel
Palestine
World
By Fathima
இஸ்ரேலிய படைகள் நடத்திய சோதனைகளில் ஏழு பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேலிய படைகள் நடத்திய சோதனைகளின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சோதனை
இதன்போது, பெத்லகேமில்(Bethlehem) ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரமல்லாவிற்கு வடக்கே (North of Ramallah) உள்ள ஜலாசோன் அகதிகள் முகாமில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நப்லஸ் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பலஸ்தீனிய வீடுகளிலும் இஸ்ரேலிய படைகள் சோதனை நடத்தியதாகவும் ஆனால் அந்த பகுதியில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.