தென்கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட 2030 வேலைவாய்ப்பு திறன்கள் பயிற்சி முகாம்

South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Job Opportunity
By Rakshana MA Jul 22, 2025 12:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

2030 மற்றும் அதன் பிந்தைய வேலைவாய்ப்பு தேடலில் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கணக்கியல் மற்றும் நிதித் துறையினால், CMA Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு தொழில்துறை பயிற்சி முகாம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (21) தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபா மற்றும் கணக்கியல் மற்றும் நிதித் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என்.ஷபானா ஆகியோரது மேற்பார்வையின் கீழ் “Industry Readiness: Future-Proofing Your Career for 2030 & Beyond” எனும் தலைப்பில் நடைபெற்றது.

அறுகம்பையிலுள்ள இஸ்ரேல் சபாத் இல்லத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

அறுகம்பையிலுள்ள இஸ்ரேல் சபாத் இல்லத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

விழிப்புணர்வு 

இந்த பயிற்சியில் திலின பண்டார (Associate Principal Consultant – Nagarro | Certified Trainer & Industry Mentor) பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

SEUSL students attend 2030 job skills training with industry mentor

தொழில்துறையில் தனது அனுபவங்களை பகிர்ந்த அவர், தொழில் சந்தையின் எதிர்கால நிலை, வேலைவாய்ப்புக்கான திறன்கள், தொழில்முனைவர் போக்குகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

இம்முயற்சி, Career Development பாடநெறியின் ஒரு பகுதியாகவும், மாணவர்களுக்கு தொழில் உலகின் தேவைகளை புரிந்து கொள்ளும் ஒரு முக்கியமான தளமாகவும் அமைந்தது.

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக வழங்கப்பட்ட அங்கீகாரம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக வழங்கப்பட்ட அங்கீகாரம்

எதிர்கால வேலைவாய்ப்பு 

இந்த நிகழ்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது எதிர்கால வேலைவாய்ப்பு திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் வழிகாட்டல்களை பெற்றனர்.

தென்கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட 2030 வேலைவாய்ப்பு திறன்கள் பயிற்சி முகாம் | Seusl Hosts 2030 Career Bootcamp

இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் தொழில்துறை இணைப்பு திறன்களை மேம்படுத்தும் வகையிலும், நவீன வேலைவாய்ப்பு சந்தையில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க தேவையான மனப்பாங்கினை உருவாக்கும் வகையிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

மேலும் இந்நிகழ்வின் போது விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஐ.எம்.றியாத், எம்.பர்விஸ், ஏ.ஆர்.பாத்திமா தபாணி உள்ளிட்ட பலர் பங்குகொண்டிருந்தனர்.

உச்சம் தொடும் தங்க விலை!

உச்சம் தொடும் தங்க விலை!

உதட்டை அழகு படுத்த இஸ்லாம் கற்று தந்த வழி

உதட்டை அழகு படுத்த இஸ்லாம் கற்று தந்த வழி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW