அறுகம்பையிலுள்ள இஸ்ரேல் சபாத் இல்லத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
பொத்துவில் (Pottuvil) அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது, நேற்று (21) பிரதேச சபை முன்றலில் இடம்பெற்றுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வின் போது இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டதுடன் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு, உதவித் தவிசாளர் கொண்டு வந்த பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணை மீது உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உரையாற்றும் போது தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்ட்டது.
அரசே அறுகம்பை சபாத் இல்லத்தை உடன் அகற்று, இலங்கை அடுத்த பலஸ்தீனா?, இஸ்ரேலின் அடுத்த கொலனியாக இலங்கையை ஆக்க இடமளிக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இங்கு தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், உறுப்பினர்கள் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், சில்வா ஆகியோரும் ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









