ஷேக் ஹஸீனாவை பங்களாதேஷூக்கே அனுப்புங்கள் : கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்
ஷேக் ஹசீனாவையும், இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ஏனையோரையும் உடனடியாக பங்களாதேஷூக்கு திருப்பி அனுப்பக் கோரிக்கை முன்வைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (28) இலங்கை - பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகத்திற்கு முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்ககைக்கான காரணம்
பங்களாதேஷ் நாட்டில் ஷேக் ஹஸீனாவின் தலைமையிலான அரசாங்கத்தினை சில மாதங்களுக்கு முன்னர் அந்நாட்டு மாணவ இயக்கங்கள், எதிர்கட்சியினர், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு போராட்டமொன்றை நிகழ்த்தி அதன் ஆட்சியை கவிழ்த்துள்ளனர்.
இதன்போது பொது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என பலபேர் இந்த அரசாங்கத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக போராட்டமானது மேலும் உக்கிரமடைந்துள்ளது. நிலைமை தீவிரமடைந்ததை அறிந்து அரசாங்கத்தை சேர்ந்த 45 பேர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளனர்.
மேலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் தலைமையினாலான அரசாங்கத்திற்கு எதிராக அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தினால் அவர்களை கைது செய்ய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தப்பிச்சென்றவர்களை இந்தியா அடைக்கலம் கொடுத்து வைத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம். அத்துடன் இவ் அடைக்கலத்தை கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுத்து அவர்களை அவர்களின் நாட்டிற்கே அனுப்ப கோரி இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |