அம்பாறையில் அடித்து உடைக்கப்பட்ட கடை
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரது கடை அடையாளம் தெரியாத சந்தேகநபர்களினால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பாண்டிருப்பு தாளவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடை ஒன்றே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
உடைக்கப்பட்ட கடை
உடைக்கப்பட்ட கடையானது, அம்பாறை - திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக, சங்கு சின்னத்தில் இலக்கம் ஐந்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடைக்கப்பட்ட கடையை குறித்த வேட்பாளர் பிரகாஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்றுக்கொள்ளப்படாத முறைப்பாடு
இதனைத் தொடர்ந்து தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டினை அளிக்க, பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு வேட்பாளர் பிரகாஸ் ஆதரவாளருடன் சென்றுள்ளார்.
கொடுக்கப்பட்ட முறைப்பாட்டினை பொலிஸ் நிலையம் ஏற்றுக்கொள்ள மறுத்ததின் காரணமாக இன்று (28) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |