தேசிய தமிழ் தினப்போட்டியில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் சாதனை
2024ஆம் ஆண்டிற்கான தேசிய நிலை தமிழ் தினப்போட்டியில் அம்பாறை - அக்கறைப்பற்று முஸ்லிம் பாடசாலைகள் முதலாம், இரண்டாம் மற்றும் முன்றாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன என அக்கறைப்பற்று கல்வி வலயம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான தமிழ் தினப் போட்டியில் மூன்று நிகழ்ச்சிகளில் இரண்டு பாடசாலைகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தமிழ் தினப்போட்டியானது இம்முறை அக்கறைப்பற்றில் மூன்று சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது.
நிகழ்ச்சிகள்
திறந்த நிலைப் போட்டியான 08 மாணவர்கள் பங்கு பற்றிய முஸ்லிம் நிகழ்ச்சியானது முதலாம் இடத்தினையும், 06 மாணவர்களை கொண்ட நாட்டார் பாடல் இரண்டாம் இடத்தினையும் பெற்று அக்/ அக்கறைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பெருமையீட்டியுள்ளது.
மேலும் 2ஆம் பிரிவில் வாசிப்பு போட்டியில் மூன்றாம் இடத்தினை அக்/ அர்ரஹ்மியா வித்தியாலயம் பெற்று சாதனை படைத்துள்ளது.
அக்கறைப்பற்று கல்வி வலயம் பங்கு பற்றிய மூன்று நிகழ்ச்சிகளிலும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயமானது, இவ்வெற்றிக்கு காரணமாக இருந்த அதிபர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள், உறுதுணையாக செயற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |