மட்டக்களப்பில் பலப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு
Sri Lanka Police
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்திலுள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்டிய வளாகத்தில் இன்று(20) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இதன்படி, நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சகல வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின்பு உள்நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









