நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து சஜித் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு மத்தியில், நீதிபதிகளின் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
நீதிபதிகளின் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அதனை மாற்றியமைத்து, அவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் குற்றங்கள்
நீதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் குற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கையை தொடர வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
எனினும் நீதிபதிகளின் பாதுகாப்பை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதன்போது பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |