நாட்டில் இன்று முதல் கட்டாயமாகும் புதிய போக்குவரத்து நடைமுறைகள்
போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று முதல் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் ஆசன பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, பாதுகாப்பை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகும்.
நாட்டில் நேரும் பல்வேறு வாகன விபத்துக்களில், ஆசன பட்டி பயன்படுத்தாமை உயிரிழப்புகளுக்கான முக்கியக் காரணமாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து நடைமுறை
மேலும், அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பாக ஆகஸ்ட் 1 முதல் இலகுரக வாகனங்களில் பின் இருக்கை பயணிகளும் ஆசன பட்டி அணிய வேண்டியது கட்டாயம்.
அதேவேளை, செப்டெம்பர் 1 முதல் எல்லா வகை வாகனங்களிலும், எல்லா இருக்கைகளிலும் பயணிக்கும் அனைவரும் ஆசன பட்டி அணிய வேண்டியது கட்டாயமாகும்.
மேலும், இந்நடவடிக்கை வாகன பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சாலை விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலும் நடைமுறைப்படுத்துவதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |