தென்கிழக்கு பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலைக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்
தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலை முறையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறியமைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறை
மேலும், கிடைத்த முறைப்பாட்டினை அடிப்பைடையாக கொண்டு நேற்று(10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சம்மாந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |