முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைக்கான புதிய அமைப்பாளர் நியமனம்

Srilanka Muslim Congress Eastern Province Kalmunai Political Development
By Rakshana MA Aug 12, 2025 12:29 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைப் பிரதேச அமைப்பாளராக எம்.எச்.எம்.சரோ தாஜுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) இடம்பெற்ற மருதமுனைப் பிரதேசத்தின் கட்சிக் கட்டமைப்பை புனரமைப்பு செய்வதற்கான கலந்துரையாடலின் போதே, இந்த நியமனம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவருக்கான நியமனக் கடிதம் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பரினால் வழங்கி வைக்கப்பட்டது.

பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம்

பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம்

அமைப்பாளர் நியமனம் 

குறித்த கலந்துரையாடலானது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைப் பிரதேச முன்னாள் அமைப்பாளர் ஏ.ஆர்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைக்கான புதிய அமைப்பாளர் நியமனம் | Saro Thajudeen Appointed Slmc Maruthamunai Head

இதன்போது மருதமுனைப் பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், கல்முனை மாநகர முன்னாள் மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல்

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல்

நிலைபேறான அபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பு

நிலைபேறான அபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW