ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலானது இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்திய திட்டங்கள்
அத்தோடு, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டது.
மேலும், இந்தியக் கடன்உதவிகள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மேலும் ஆராயப்பட்டதுடன், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |