எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

By Mayuri Oct 22, 2024 01:22 PM GMT

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு முறைமையொன்று இருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (22.10.2024) இடம்பெற்றிருந்தது.

இதன்போது எரிவாயு விலையை அதிகரிக்கபோவதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளனவா?, எரிவாயு விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா? என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், எரிவாயு விலைகளை அதிகரிப்பதற்கு முறைமையொன்று உள்ளது.

எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல் | Lp Gas Price In Sri Lanka

அவை தொடர்பில், எரிவாயு நிறுவனங்கள் ஊடக அறிக்கைகள் மூலம் அறிவிக்கும்.

எனினும், விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா? என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW