சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை

Sri Lanka Police Ampara Eastern Province
By Laksi Aug 12, 2025 01:06 PM GMT
Laksi

Laksi

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையில் இன்று(12) பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைக்கான புதிய அமைப்பாளர் நியமனம்

முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைக்கான புதிய அமைப்பாளர் நியமனம்

பரிசோதனை

மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறை உடைகள் , விடுதிகள் , அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை | Sammanthurai Police Station Half Yearly Parade

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள் உடைகள் வாகனங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பு அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம்

பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery