சம்மாந்துறையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள ஊடக மைய உறுப்பினர்கள்
சம்மாந்துறை(Sammanthurai) ஊடக மைய உறுப்பினர்களுக்கு அவர்களின் உயரிய பங்களிப்புக்களை கருத்திற்கொண்டு தனியார் முகநூல் தொலைக்காட்சியினால், விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த கௌரவிக்கும் நிகழ்வானது சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த நிகழ்வு தனியார் முகநூல் தொலைக்காட்சியின் கலை கலாசார ஊடக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் தனியார் முகநூல் தொலைக்காட்சியின் பணிப்பாளர் அல்-ஹாபிழ் றிசான் முகம்மட் சில்ஹான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
விருது வழங்கி கௌரவிப்பு
அத்துடன், ஊடகத்துறையில் செய்தி வழங்கல், தொகுப்பாளர் பணிகள், கலைநயமான நிகழ்ச்சிகள் மற்றும் சமூக சேவைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியமை தொடர்பில் சம்மாந்துறை ஊடக மைய உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கௌரவிப்பின் நோக்கத்தின்படி, அவர்கள் செய்தி வழங்கல், சமூக விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கான தகவல் பரப்புவதில் செய்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனீபா, 241 படைப்பிரிவின் பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் மேஜர் ஜானக சுப சிங்க, பொலனறுவை மாவட்ட சிரேஸ்ட பொறியாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர், மட்டக்களப்பு சம்மாந்துறை சிலியட் உயர் கல்வி நிறுவனத்தின் பிரதம கணக்காளர் எஸ்.எம்.ஜிப்ரி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |