2025இல் அதிகரிக்கப்போகும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!
எதிர்வரும் 2025இல் ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு, நிச்சயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (A. Anil Jayanta Fernando) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சம்பள அதிகரிப்பு தொடர்பான முழு விபரங்களும் உள்ளடக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் நம்பிக்கை...
மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நாங்கள் வேலை செய்கிறோம், அரசியல் இலாபத்திற்காக அல்ல, ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்கள் கணிசமான இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆகவே, தற்போதுள்ள சம்பளம் போதுமானதாக இல்லை.
சம்பள அதிகரிப்பு அவசரத் தேவையாக காணப்படுகின்றது. நாம் அனைவரும் அறிந்தது போல், முந்தைய அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
ஒரு பொறுப்பான நிர்வாகம் என்ற வகையில், 2026 வரை மக்களைக் கச்சையை இறுக்கிக் கொண்டு காத்திருக்க வேண்டும் என்று நாங்கள் கூற முடியாது. நாங்கள் அத்தகைய அணுகுமுறையை எடுக்கவில்லை.
எனவே, அடுத்த ஆண்டுக்குள் உறுதியான சம்பள அதிகரிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்" என்று பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |