ஜனாதிபதி வேட்பாளர்களிலே அமைப்பு மாற்றத்தை செய்து காட்டியவர் சஜித்: இம்ரான் எம் . பி

Sajith Premadasa Imran Maharoof Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 27, 2024 03:12 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி வேட்பாளர்களிலே அமைப்பு மாற்றத்தை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி கோவிட் பிரச்சினையாக இருந்தாலும் சரி விமர்சன அரசியலை விட்டுவிட்டு சேவை அரசியலை முன்னெடுத்து அமைப்பு மாற்றம் செய்து காட்டியவர் சஜித் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கு கொண்ட கந்தளாய் பிரதேசத்தில் நேற்று(26) காலை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணிலைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்: ரிஷாட் பதியுதீன் காட்டம்

ரணிலைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்: ரிஷாட் பதியுதீன் காட்டம்

அமைப்பு மாற்றம்

இன்று எல்லாரும் கேட்கும் விடயம் அமைப்பு மாற்றம்.இவர்கள் மேடைகளில்,போராட்டங்களில் அமைப்பு மாற்றம் பற்றி பேசினாலும் தேர்தல் என்ற ஒன்று வரும் போது அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்களிலே அமைப்பு மாற்றத்தை செய்து காட்டியவர் சஜித்: இம்ரான் எம் . பி | Sajith Who Did The System Change Imran Maharoof

ஜனாதிபதி வேட்பாளர்களிலே அமைப்பு மாற்றத்தை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச மட்டுமே.நாம் வரலாற்றில் பல எதிர்கட்சி தலைவர்களை கண்டுள்ளோம்.

ரணிலை ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும்: எம்.ஆர்.எம் பைசால் வேண்டுகோள்

ரணிலை ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும்: எம்.ஆர்.எம் பைசால் வேண்டுகோள்

ஜனாதிபதியாக தெரிவு 

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்தை கவிழ்க்க என்ன செய்யலாம் என யோசித்தே நாம் கண்டுள்ளோம்.ஆனால் வரலாற்றில் முதன்முறையாக அமைப்பு மாற்றத்தை மாற்றியவர் எமது தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே.

ஜனாதிபதி வேட்பாளர்களிலே அமைப்பு மாற்றத்தை செய்து காட்டியவர் சஜித்: இம்ரான் எம் . பி | Sajith Who Did The System Change Imran Maharoof

எதிர்க்கட்சி தலைவராக இருந்து பாடசாலைகளுக்கு உதவ முடியுமாக இருந்தால், வைத்தியசாலைகளுக்கு உதவ முடியுமாக இருந்தால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எவ்வாறான அபிவிருத்தியையும் அமைப்பு மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை: எம்.எஸ்.அமீரலி

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை: எம்.எஸ்.அமீரலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW