இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan Sajith Premadasa
By Laksi Sep 16, 2024 10:24 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள  ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற தமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் இன்று (16) காலை கட்சியின் அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

சஜித்திற்கு ஆதரவு

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு | Sajith Support For Illankai Tamil Arasu Kachchi

எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது சஜித்திற்கு ஆதரவை வழங்குமாறு இலங்கை தமிழ் அரசு கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி எடுத்துள்ள இந்த தீர்மானத்தில் தனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு | Sajith Support For Illankai Tamil Arasu Kachchi

இதன்போது, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW