சஜித் பிரேமதாசவுக்கும் கொரிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
கொரிய (Korean) குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுகளை தொடர்ந்தும் பேணிச் செல்வதற்காக தனது நன்றியை சஜித் பிரேமதாச தெரிவித்ததோடு மேலும் இந்த உறவுகளை பேணிச் செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலைவாய்ப்புக்கள்
அத்துடன் கொரிய குடியரசில் வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கையர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அத்தோடு, வேலைவாய்ப்புக்களுக்கு தேவையான பயிற்சி பெற்ற ஊழியர்களை வழங்கும் நாடாக உச்சபட்சமாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்கு எதிர்க்கட்சியிலிருந்தும் தனது பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |