நாட்டு மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வருவோம்: சஜித் உறுதி

Sajith Premadasa Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 20, 2024 03:28 PM GMT
Laksi

Laksi

நாட்டு மக்களின் ஆணையுடன் தாம் ஆட்சிக்கு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தன்னையும் தனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீரிகம நகரில் நேற்று (19) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

ரணில் எமது ஆதரவை இழந்ததற்கு இதுவே காரணம்! றிஷாட் விளக்கம்

ரணில் எமது ஆதரவை இழந்ததற்கு இதுவே காரணம்! றிஷாட் விளக்கம்

பிரதமர் பதவி

நான் சந்தர்ப்பவாத அரசியலைப் பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அந்த அழைப்பை நான் நிராகரித்தேன்.

நாட்டு மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வருவோம்: சஜித் உறுதி | Sajith Confident On President Election

அந்தக் கொள்கையினால் தான் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு கூறியபோதும் அதனை நான் நிராகரித்தேன்.

அவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்தச் நாட்டை சூறையாடி வளங்களையும், பணத்தையும் திருடிய திருடர்களின் பாதுகாவலராக நான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

மக்களின் ஆணை

திருடர்களைப் பாதுகாக்கின்ற வாயில் காவலாளியாகவும் இருந்திருப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும், பணத்துக்காகவும் பேரம்போவதற்கு தயார் இல்லை.

எந்தவொரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயற்படப்போவதில்லை.

சஜித் பிரேமதாச ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது. நாட்டு மக்களின் ஆணையுடன் தான் ஆட்சிக்கு வருவோம்” என தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீ வைப்பு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீ வைப்பு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW