பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நஷ்டஈடு: சஜித் கோரிக்கை

Parliament of Sri Lanka SJB Sajith Premadasa
By Laksi Dec 17, 2024 12:42 PM GMT
Laksi

Laksi

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்குமாறு சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நடந்து கொண்டது.

கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்: சஜித்

கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்: சஜித்

முஸ்லிம்களுக்கு நீதி

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது.

பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நஷ்டஈடு: சஜித் கோரிக்கை | Sajid Demands Compensation For Janaza Burning

இந்நிலையில், உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கொரோனா கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: அமைச்சர் அளித்த பதில்

கொரோனா கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: அமைச்சர் அளித்த பதில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW