அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Government Employee Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Nov 05, 2024 02:48 PM GMT
Laksi

Laksi

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலத்த மின்னல் தாக்கம்: 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம்: 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச சேவைகள் 

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுகின்றது.

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Rural Development Requires Support Civil Service

நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணி. இந்தநிலையில் மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

லிட்ரோ எரிவாயுவின் விலை டிசம்பரில் அதிகரிக்கும்: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

லிட்ரோ எரிவாயுவின் விலை டிசம்பரில் அதிகரிக்கும்: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

தேவையற்ற செலவு

அத்துடன், அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Rural Development Requires Support Civil Service

நாட்டின் பிரதேச அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி  மக்கள் சேவைகளை குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில, செயலாளர் ஜயவீர பெர்னாண்டோ உட்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் எம்.பி க்கு கடூழிய சிறைதண்டனை!

முன்னாள் எம்.பி க்கு கடூழிய சிறைதண்டனை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW