அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Ampara Sri Lankan Peoples Eastern Province
By Laksi Aug 08, 2024 10:13 AM GMT
Laksi

Laksi

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளிலேயே இந்த கட்டாக்காலி மாடுகள் சுற்றித்திரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீதிகளை ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது.

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

பொதுமக்கள் கோரிக்கை

எனவே, கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Road Accident Caused By Gattakali Cows In Amparai

அத்துடன், இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து அசுத்தப்படுத்தி வருவதும் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.

மேலும், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும், இதனை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW