இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

Dr Ramesh Pathirana Sri Lanka Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka
By Laksi Aug 08, 2024 09:07 AM GMT
Laksi

Laksi

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று (8) நாடாளுமன்றத்தில் மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இதேவேளை,  தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல் | Shortage Of 52 Medicines In Government Hospitals

மேலும், சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சி காணும் தங்க விலை

வீழ்ச்சி காணும் தங்க விலை

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம்

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW