எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக சில இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இனங்காணப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல்
இந்தநிலையில், வெள்ள நீரில் கிருமிகள் உடலுக்குள் உட்புகுந்து, எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த ஆண்டில் சுமார் பத்தாயிரம் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 120 முதல் 200 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடுமையான காய்ச்சல் மற்றும் கால் நோ, கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்குமாறு வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |