நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Ceylon Electricity Board
By Laksi Dec 11, 2024 04:43 AM GMT
Laksi

Laksi

நாட்டில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரித்துள்ளார்.

மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் நேற்றையதினம் (10) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திரமாக, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்காததால், அந்த வாரியத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வரும் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது.

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

மின்கட்டண உயர்வு

மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், நீர், மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ள நிலையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயம் என்றும் நந்தன உதயகுமார குறிப்பிட்டார்.

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை | Risk Of Power Cut Again In Sri Lanka

அவ்வாறு மின்சார சபை அதிகாரிகள் செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய சபையிடம் பணம் இருக்காது எனவும் அவ்வாறு ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம் எனவும் நந்தன உதயகுமார தெரித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW