மஸ்தான் போன்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் : ரிஷாட் பகிரங்கம்

Ampara Mannar Srilanka Muslim Congress Risad Badhiutheen K. Kader Masthan
By Laksi Oct 30, 2024 03:00 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மஸ்தான் போன்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடை செய்யும் மனநிலையில் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார், தாராபுரத்தில் நேற்று (29) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் கரை ஒதுங்கும் கறுப்பு நிற மீனினம்

மட்டக்களப்பில் கரை ஒதுங்கும் கறுப்பு நிற மீனினம்

பொதுத் தேர்தல்

அவர் மேலும் தெரிவித்ததாவது, “நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் எம்.பி.க்கள் 80 பேர் போட்டியிடவில்லை. வெல்ல முடியாது எனக் கருதியே இவர்கள் ஒதுங்கியுள்ளனர். அதேபோன்று, போட்டியிடும் இன்னும் சிலரை மக்கள் இம்முறை தோற்கடிக்கவும் தீர்மானித்துள்ளனர்.

மஸ்தான் போன்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் : ரிஷாட் பகிரங்கம் | Rishad Said Mastan S Actions Were Low

எனது சசோதரர் ரியாஜ் பதியுதீனை சிறையிலடைப்பதற்கு, கோட்டாவின் இனவாத எம்.பி.க்களுடன் சேர்ந்து மஸ்தானும் ஒப்பமிட்டார். நான், சிறையிலிருந்தபோது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என அடிக்கடி சோதனையிட்டனர். இறைவனின் நாட்டத்தால் என்னை கொரோனா தொற்றவில்லை.

இல்லாவிட்டால், என்னை எங்கோ இழுத்துக்கொண்டு தொலைத்துவிடவே ராஜபக்ஷக்களுடன் சேர்ந்து இனவாதிகள் முயற்சித்தனர். இதற்கு உடந்தையாகச் செயற்பட்டவர்தான் இந்த மஸ்தான்.

நெருங்கும் பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

நெருங்கும் பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பலமுள்ள கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ்

நமது பிள்ளைகள் படிப்பதற்காக பாடசாலைகளுக்கு பல கட்டடங்களை கொண்டுவந்த வேளை, ரணிலின் செயலாளரிடம் சென்று, அந்தக் கட்டடங்களைக் கட்டவிடாமல் தடை விதித்தார். இந்த அபிவிருத்திகள் இங்கு நடந்தால், ரிஷாட்டின் அரசியல் பலமடையும் எனப் பயந்தவர்தான் இவர்.

மஸ்தான் போன்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் : ரிஷாட் பகிரங்கம் | Rishad Said Mastan S Actions Were Low

வன்னி மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாத்தவாறே நான் செயற்படுகின்றேன். இறைவனின் உதவியால், நமது கட்சி இந்த வன்னி மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெறுவதற்கான களநிலவரங்கள் கனிந்து வருகின்றன. 

அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் ஆசனங்களை வெல்லும் நிலைமைகளே ஏற்பட்டுள்ளன. இவ்வாறு நிகழ்ந்தால், சிறுபான்மைக் கட்சிகளுக்குள் அதிக பலமுள்ள கட்சியாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும்” என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் போதைப்பொருள் பயன்படுத்த முயன்ற இளைஞர்கள் கைது

ஹட்டனில் போதைப்பொருள் பயன்படுத்த முயன்ற இளைஞர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW