புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து
10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு (Jagath Wickramaratne) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (17) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.அதேபோன்று, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இரண்டாவது சபாநாயகர்
பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தின் சபாநாயகராக நீங்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறீர்கள்.
ஒரு குறுகிய காலத்துக்குள் இரண்டாவது சபாநாயகராக நாடாளுமன்றத்தில் தெரிவாகியுள்ள நீங்கள், ஒரு வைத்தியராகவும் இருக்கின்றீர்கள்.
எனவே, சகல கட்சிகளையும், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதித்து, அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாத்து, நேர்மையாகச் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |