மத்ரஸா மாணவர்களின் இறப்பு குறித்து நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட ரிஷாட்

Parliament of Sri Lanka Risad Badhiutheen Eastern Province Floods In Sri Lanka Nintavur
By Rakshana MA Dec 03, 2024 12:05 PM GMT
Rakshana MA

Rakshana MA

காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபையில் வலியுறுத்தினார்.

இன்றைய தினம் (03) நாடாளுமன்ற அமர்வில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து அவர் மேற்படி விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

இயல்பு நிலைக்கு திரும்புகிறது மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

இயல்பு நிலைக்கு திரும்புகிறது மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

ரிஷாட்டின் விசனம்

தொடர்ந்து பேசிய அவர், “அம்பாறை மாவட்டத்தில், மாவடிப்பள்ளியில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது வீடுகளுக்கு நான் நேற்றுமுன்தினம் (01) விஜயம் செய்திருந்தேன். அப்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பட்டினாலேயே இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி விசனம் வெளியிட்டனர்.

மத்ரஸா மாணவர்களின் இறப்பு குறித்து நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட ரிஷாட் | Risad Bathiudeen Talks Madrasa Students Accident

குறிப்பாக, இந்த சம்பவம் இடம்பெற்ற போது, பொலிஸார் கடமையில் இருந்திருக்கிறார்கள். வெள்ளப் பாதிப்பினால், மத்ரஸாவிலிருந்து வெளியேறுவதற்கு வழி இல்லாததன் காரணமாகவே, மத்ரஸா நிர்வாகம் மாணவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி அனுப்பியிருக்கின்றது.

இவ்வாறு அவர்கள் அந்தப் பாதையில் பயணித்த போது, வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருந்த நிலையில், பொலிஸார் வீதியை மூடாமல், போக்குவரத்துக்கு அனுமதி அளித்தமையானது பொறுப்பற்ற செயற்பாடாகும். அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை விளக்கியிருக்க வேண்டும்.

சாய்ந்தமருதில் ஏற்பட்ட வெள்ளம் : கழகத்திலிருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதம்

சாய்ந்தமருதில் ஏற்பட்ட வெள்ளம் : கழகத்திலிருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதம்

பொலிஸாரின் பொறுப்பற்ற செயல்..

அதுமட்டுமின்றி, சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கு பிற்பாடு, கடற்படையினர் வருகை தந்து அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

அதுவரைக்கும், பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, அங்கிருந்தவர்கள் இரண்டு உயிர்களை முயற்சி செய்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

மத்ரஸா மாணவர்களின் இறப்பு குறித்து நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட ரிஷாட் | Risad Bathiudeen Talks Madrasa Students Accident

இதன்போது, அங்கிருந்த பொதுமக்கள், வெள்ளத்தில் சிக்குண்டவர்களை காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் கெஞ்சியபோது, பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்திருகின்றார்கள்.

பொலிஸ் நிலையத்துக்கு அவர்கள் சென்று, ஒரு மணித்தியாலம் வரை முறைப்பாட்டை செய்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கான துரித பாதுகாப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடாது, இந்த மக்களை இவ்வாறு அங்குமிங்கும் செல்லுமாறு பணித்திருப்பது கவலை தருகின்ற விடயம்.

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

துரித விசாரணை

எனவே, இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என்று இந்த உயர் சபையில் கோரிக்கை விடுக்கின்றேன்” என்று கூறினார்.

இதற்கு பதில் வழங்கிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, “மேற்படி, சம்பவம் தொடர்பில் ஏலவே நாம் கலந்துரையாடியுள்ளோம். மேலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக ஆராய எண்ணியுள்ளோம்.

இந்த விடயம் தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வார்” என்று கூறினார்.


சாய்ந்தமருது பிரதேசத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை !

சாய்ந்தமருது பிரதேசத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை !

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW