இயல்பு நிலைக்கு திரும்புகிறது மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதி வெள்ளத்தினால் மூடப்பட்டிருந்தது.
தற்போது வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்களுக்கான தரைவழிப்போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இயந்திரப் போக்குவரத்து
இதற்கிடையில், கிரான் பிரதேச செயலகத்தினால் மக்களின் போக்குவரத்திற்காக இயந்திர படகு சேவை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வெள்ளம் குறைவடைந்து அந்த பகுதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்புகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த தங்கள் வயல் நிலங்களை விவசாயிகளும் பார்வையிட வந்துள்ளதுடன் கடந்த பல நாட்களாக வெள்ளத்தினால் வீதி மூடப்பட்ட காரணத்தினால் சேதமடைந்த வயல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |