சாய்ந்தமருது பிரதேசத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை !
Ampara
Climate Change
Eastern Province
Weather
By Laksi
சாய்ந்தமருது பிரதேச வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே .மதன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புகை விசிறல் நடவடிக்கை
இந்தநிலையில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |