பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து ஆணைக்குழுவின் தேசிய தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கட்டண திருத்தத்தை மேற்கொள்ளும் அளவுக்கு எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை
கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினாலும் குறைக்க இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது.
மேலும், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 12 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் லங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |