நற்பிட்டிமுனையில் ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

Ampara Batticaloa Srilanka Muslim Congress
By Laksi 8 months ago
Laksi

Laksi

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சீ.எம் ஹலீம் தலைமையில் ஓய்வு நிலை சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (4) சவளக்கடை றோயல் கார்டனில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் கல்வித்திட்ட மற்றும் சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டார்.

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

கௌரவிக்கப்பட்ட சாதனையாளர்கள்

இதன்போது, அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். பின்னர் கிராஅத், வரவேற்புரை, வரவேற்பு கீதம் நிகழ்த்தப்பட்டதுடன், பிரதம அதிதியினால் பள்ளிவாசலுக்கு மின் குமிழ் கையளிக்கப்பட்டுள்ளது. 

நற்பிட்டிமுனையில் ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா | Retirement Achievers Appreciation Ceremony

இதனையடுத்து,  நற்பிட்டிமுனை பிரதேசத்தில் உள்ள ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கு கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் கௌரவ அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சீ.எம்.முபீத் மற்றும் அல் - கரீம் பவுண்டேஷனின் உறுப்பினர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery