ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

Sri Lankan Peoples Festival Saudi Arabia World
By Rakshana MA Feb 11, 2025 01:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்தவகையில் 2025ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி!

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி!

ஹஜ் பயணம்

இதன்படி, உலகம் முழுவதுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டுக்கும் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு ஆண்டுதோறும் ஹஜ் பயணத்திற்கான அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் மக்காவில் ஹஜ் பயணத்திற்கு வரும் பக்தர்களின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் | Restrictions Imposed On Those Performing Hajj

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 2025ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது, யாத்ரீகர்களுடன் குழந்தைகள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் போது, இதுவரை ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம்

காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம்

தொடரும் மின்வெட்டு : இலங்கை மின்சார சபை விளக்கம்

தொடரும் மின்வெட்டு : இலங்கை மின்சார சபை விளக்கம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW