பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Laksi Jul 24, 2024 05:52 AM GMT
Laksi

Laksi

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணுக்கு கட்டுப்பாட்டு விலை! அமைச்சரின் அறிவிப்பு

பாணுக்கு கட்டுப்பாட்டு விலை! அமைச்சரின் அறிவிப்பு

பேக்கரி பொருட்களின் விலை 

இந்தநிலையில், நுகர்வோர் உணரக்கூடிய விலையில் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Reduction In Price Of Bakery Products In Sri Lanka

இதேவேளை, பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW