முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஜயம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விஜயத்தினை அவர் நாளையதினம் (21) மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஒன்றில் கலந்து கொள்ளவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரிவுரை
குறித்த விரிவுரை நாளை மறுதினம் (22) மாலை 06.00 மணிக்கு உயர்கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு (India) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |