முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
புதிய இணைப்பு
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை பதுளை நீதவான் இன்றையதினம் பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, ஹரீன் பெர்னாண்டோ தலா 05 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைதி தேர்தல் காலத்தில் பதுளை நகரில் இடம்பெற்ற சட்டவிரோத பேரணி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் குழுவுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த வேளையில் பதுளை பொலிஸார் அவர்களை அங்கிருந்து கலைத்துள்ளனர்.
பதற்றமான சூழல் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சர், தான் அணிந்திருந்த ஆடையை கழட்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |