நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவது கொடுப்பனவுகள் தான் சம்பளம் அல்ல!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள்
இது தவிர, வருகை கொடுப்பனவாக நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
மேலும், தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள எம்.பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.
கோரிக்கைகளுக்கு ஏற்ப சேவைகள்
தொடர்ந்து, மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும்.
மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளது.
இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் அமைச்சு ஏற்கும் எனவும் குஷானி ரோஹணதீர குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |