அசாத் மௌலானாவை விசாரிக்க அரசு நடவடிக்கை! பிள்ளையான் தொடர்பில் சபையில் அம்பலமான முக்கிய தகவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை எனவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
அசாத் மௌலானா
மேலும் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கருத்துக்களை வெளிப்படுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகபாடியான ஹன்சிர் அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரிக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
அத்தோடு, அசாத் மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க இரண்டு குழுக்கள் முந்தயை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதாகவும், அதன் அறிக்கைகள் கத்தோலிக்க சபையால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அசாத் மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2023 மற்றும், 2024 ஆம் ஆண்டிலும், மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க இரண்டு ரணிலால் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
நிராகரிக்கப்பட்ட அறிக்கை
இந்தக் குழுவை கத்தோலிக்க சபை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் அறிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட்டது.
ஆனால் தற்போது எமது அரசாங்கத்தில் இந்த விசாரணை முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்நிலையில் விசாரணையை மேற்கொள்ள பல தடைகள் காணப்படுகின்றன. அதனை சபையில் வெளிப்படுத்த விடும்பவில்லை.
மேலும், எதிர்கால விசாரணையில் தடைகள் ஏற்படும் என்ற நிலையில் இதனை பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |