ரணிலின் சில்லறைச் சொகுசுகளால் சமூகங்களின் பிரச்சினைகள் தீராது : ரிஷாட் ஆதங்கம்

Mannar Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Rukshy Sep 02, 2024 08:18 AM GMT
Rukshy

Rukshy

ரணிலின் சில்லறைச் சொகுசுகளால் சமூகங்களின் பிரச்சினைகள் தீராது ஆறு தடவைகள் பிரதமராக இருந்தும் அவர் செல்லாக்காசானவர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

அயல்நாட்டு கடற்றொழிலாளர்கள்

மேலும் தெரிவிக்கையில், "சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்லவைக்க வேண்டும். மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள சகல சமூகங்களதும் தெரிவாக சஜித் பிரேமதாச இருப்பார்.

ரணிலின் சில்லறைச் சொகுசுகளால் சமூகங்களின் பிரச்சினைகள் தீராது : ரிஷாட் ஆதங்கம் | Ranil Retail Luxuries Not Solve Society Problems

விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் நாளாந்த தொழிலாளர்கள் வாழும் இந்தப் பிரதேசத்தில் பல பிரச்சினைகள் உள்ளன.

அயல்நாட்டு கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் அதிகம் பாதிக்கப்படுவது மன்னார் மாவட்டமே. இது குறித்து, எமது வேட்பாளர் சஜித்திடம் விளக்கியுள்ளோம். அவரது ஆட்சியில் இதற்கு தீர்வு கிடைக்கும்.

நாளை (03) காலையில் வவுனியா மாவட்டத்துக்கும் மாலையில் மன்னார் மாவட்டத்துக்கும் சஜித் பிரேமதாச வரவுள்ளார். அணிதிரண்டு அவரை ஆதரிக்க வாருங்கள்.

சமூகப் பிரச்சினைகள் 

 ஆறு தடவைகள் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. எமது மக்களின் பிரச்சினைகள் எவற்றையும் அவர் தீர்க்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தந்திரமாக இழுத்தடித்தார்.

ரணிலின் சில்லறைச் சொகுசுகளால் சமூகங்களின் பிரச்சினைகள் தீராது : ரிஷாட் ஆதங்கம் | Ranil Retail Luxuries Not Solve Society Problems

சமூகப் பிரச்சினைகளை சில்லறைக்காசுச் சொகுசுகளால் தீர்க்கவே முடியாது. வாக்குகளில்லாத சிலர் அவரவர் வாய்ப்புகளுக்காகவே ரணிலை ஆதரிக்கின்றனர்.

விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபயவின் எஞ்சிய கால ஆட்சியை, எச்சில் ஆசைகளுக்காகப் பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம்.

பரந்தும் விரிந்தும் கிடக்கும் வடமாகாண பூமியில், சுற்றுலாத் தளங்களை உருவாக்கி, வாழ்வாதரத்தைப் பலப்படுத்த சஜித் பிரேமதாசவைப் பலப்படுத்துங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

புத்தளத்தில் இரு இடங்களில் பெருமளவான பீடி இலைகள் மீட்பு..!

புத்தளத்தில் இரு இடங்களில் பெருமளவான பீடி இலைகள் மீட்பு..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW