தேர்தல் பிரசாரக் கூட்டங்களைக் குறைத்த ரணில்: வெளியான காரணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களை திடீரென குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பிரசாரக் கூட்டங்களை அவர் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தயார் செய்திருந்த முப்பது பிரசார கூட்டங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
பிரசாரக் கூட்டங்கள்
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 90 தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ரணில் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை அறுபதாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் கிராம மட்டத்தில் சிறிய குழுக் கூட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், மக்கள் பேரணிகளை நடத்துவதற்காக பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர செலவகளுக்காக பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |