இந்தியாவிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள அன்பளிப்பு

Ramadan Sri Lanka Sri Lankan Peoples Government Of India India
By Rakshana MA Mar 25, 2025 12:20 PM GMT
Rakshana MA

Rakshana MA

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் எற்பாட்டில் இஸ்லாமிய ரம்ஸான் பெருநாளினை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் ரம்ஸான் அன்பளிப்பு பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று(25) யாழ்.திருவள்ளுவர் கலாசார பண்பாட்டு மையத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்.இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்துள்ளார்.

சம்மாந்துறையில் விழிப்பூட்டல் கருத்தரங்கு

சம்மாந்துறையில் விழிப்பூட்டல் கருத்தரங்கு

ரம்ஸான் அன்பளிப்பு

இதில் யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட 220 குடும்பங்களுக்கு  இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள அன்பளிப்பு | Ramadan Gifts From India To Muslims In Sri Lanka

அத்துடன், யாழ் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 குடும்பங்களுக்கு நாளை இந்த ரம்ஸான் அன்பளிப்பு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

மேலும், இதில் யாழ் இந்திய தூதரக அதிகாரி ரம்யா, யாழ் - கிளிநொச்சி மக்கள் பணிமனையின் தலைவர் மெளலவி பி.சுபியான் உள்ளிட்ட தூதரக குழுவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

Govpay மூலம் அபாராதம் செலுத்துவதற்கு நடவடிக்கை

Govpay மூலம் அபாராதம் செலுத்துவதற்கு நடவடிக்கை

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery