சம்மாந்துறையில் விழிப்பூட்டல் கருத்தரங்கு

Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Kalmunai Sammanthurai
By Rakshana MA Mar 25, 2025 10:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் மற்றும் அதைத் தடுப்பது குறித்து சம்மாந்துறையில் விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வு நேற்று (24) சம்மாந்துறையில் அமைந்துள்ள பிராந்திய மார்பு சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கருத்தரங்கு

இந்த நிகழ்வானது, "ஆம்! எம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்" அர்ப்பணிப்பு, முதலீடு, வழங்கல் எனும் தொனிப்பொருளில் பிராந்திய மார்புச்சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சம்மாந்துறையில் விழிப்பூட்டல் கருத்தரங்கு | Awareness About Tb At Sammanthurai

இதன்போது காசநோய் தொடர்பாகவும் அந்த நோய்க்கான அறிகுறிகள், அந்நோயிலிருந்து பாதுகாப்பு பெறுதல், சமூகத்தில் காசநோயை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிராந்திய பணிப்பாளர், பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

அத்தோடு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்.எம்.எம்.ஹனீபா, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் பீ.பிரபாசங்கர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து "ஆம்! எம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்" எனும் தொனிப்பொருளுக்கு நானும் ஆதரவினை வழங்குகின்றேன் எனும் கருப்பொருளில் கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் வெளிச் சுவரில் கையெழுத்து இடும் பலகை திறந்து வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட சகலரும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச அளவில் அதிகரித்துள்ள இலங்கை கராம்பிற்கான கேள்வி

சர்வதேச அளவில் அதிகரித்துள்ள இலங்கை கராம்பிற்கான கேள்வி

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery