ரமழான் நாள் 4 : சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொள்ளுங்கள்
சுய கட்டுப்பாடு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அவசியமான பண்புகளுள் ஒன்றாகும்.
தற்போது நாம் அனைவரும் கடந்து கொண்டிருக்கும் இந்த ரமழான் மாதம் சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த காலமாக காணப்படுகின்றது.
இந்த மாதத்தில் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஆன்மீகத்தினையும் வளர்த்துக்கொள்ளலாம்.
மனதை தூய்மையாக்கும் நுட்பங்கள்
இதன்படி, சுய கட்டுப்பாட்டினால் மனிதனுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில,
- ஆன்மாவை தூய்மையாக்கி ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.
- மனதிற்கு அமைதியை அளிக்கின்றது.
- சமூகத்தில் நன்மதிப்பை அதிகரிக்கின்றது.
- இம்மை - மறுமை வாழ்வில் வெற்றி கிடைக்கின்றது.
இந்த மாதமானது அல்லாஹ்வின் அருள் மிகுதியாக நிறைந்துள்ள மாதம் ஆகையால், சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வின் அருளை அதிகமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இந்த மாதத்தில் உணவு, குடிநீர் மற்றும் தீய எண்ணங்கள் மாத்திரமன்றி கெட்டவழிகளை தரக்கூடிய அனைத்தை விட்டும் தவிர்த்து சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும்.
சுயகட்டுப்பாடு
இந்நிலையில், இந்த மாதத்தை சிறப்பாக கழிக்க வேண்டும் என்றால், சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இது வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வருவதுடன், அனைவருக்கும் புதிய ஆரம்பமாக இருக்கும்.
அத்துடன் இந்த மாதத்தை சிறப்பாக கழிக்க வேண்டும் என்றால், சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |