ரமழான் நாள் 3 : நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்வது ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
புனித ரமழான் மாதம் நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்ள ஒரு சிறந்த காலமாக காணப்படுகின்றது.
இந்த மாதத்தில் புதிய நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் உளத்தில் விஞ்ஞான ரீதியில் அதிகளவான நன்மைகள் கிடைக்கின்றன.
உலக வாழ்க்கை வெற்றிக்கு...
இவ்வாறு நல்லொழுக்கங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளுள் சில,
- ஆன்மாவை தூய்மையாக்கி ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
- சமூகத்தில் மதிப்பை அதிகரிக்கின்றன.
- மனதிற்கு அமைதியை அளிக்கின்றன.
அத்துடன், இந்த மாதம் அல்லாஹ்வின் அருள் மிகுதியாக உள்ள மாதம் ஆகையால், நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வின் அருளை பெற்று ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு உருவாகின்றது.
மேலும், இந்த மாதத்தில் பொய் சொல்லாமல், கோபம் காட்டாமல், பிறருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது போன்ற நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இது அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வரும்.
இந்த அருள் மிகுந்த மாதம் அனைவருக்கும் புதிய தொடக்கத்தையும், காலமெல்லாம் செய்த பாவங்களுக்கான தவ்பா(பாவமன்னிப்பு) கேட்கக்கூடிய மாதமாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில், அனைவரது வாழ்க்கையிலும் பாரியளவான சாதகமான மாற்றத்தை கொண்டு வரும் என்பது உறுதியான ஒன்றாக உள்ளது.
எனவே, இந்த ரமழான் மாதமானது, அதிகளவான நல்லொழுக்கங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் மறுமை வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் ஈடேற்றம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.
மேலும், இந்த மாதத்தினை மிகவும் பயனுள்ளதாக கழிக்கவும், உலக வாழ்க்கை சிறப்பாக அமையவும் நல்லொழுக்கங்களை வளர்த்துக்கொள்வது ஒரு படியாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |