பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Department of Meteorology Climate Change Weather Rain
By Rakshana MA Jul 13, 2025 03:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (13) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேலுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடன் சுமையுடன் கிண்ணியா பிரதேச சபை! புதிய தவிசாளரின் நிலை..

கடன் சுமையுடன் கிண்ணியா பிரதேச சபை! புதிய தவிசாளரின் நிலை..

வானிலை மாற்றம் 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! | Rain Alert For Many Provinces Today

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு என வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் : மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் : மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

காசா மீது தாக்குதல் : இஸ்ரேல் நோக்கி விரைந்த அமெரிக்கவின் இராணுவ கப்பல்

காசா மீது தாக்குதல் : இஸ்ரேல் நோக்கி விரைந்த அமெரிக்கவின் இராணுவ கப்பல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW